000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a சங்க நிதி |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a இரு பெரும் செல்வங்கள் சங்க நிதியும் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a தஞ்சாவூர் பெரிய கோயிலில் அளவில் பெரியதான கணத்தின் சிற்பம் ஒன்று வடபுற தேவகோட்டத்தின் கீழ் உள்ளது. கணம் அமர்ந்த நிலையில் சங்கு ஊதுகிறது. குத்துக்காலிட்டு அமர்ந்துள்ள இக்கணம் பானை வயிற்றைக் கொண்டுள்ளது. வயிற்றில் உதரபந்தம் என்னும் அணி காணப்படுகிறது. மார்பில் முப்புரிநூல், ஸ்தன சூத்திரம் அணந்துள்ளது. கைகளில் தோள் வளைகளும், முன்வளைகளும், காதில் பத்ரகுண்டலங்களும் காட்டப்பட்டுள்ளன. தலையின் சடைபாரம் சுருண்ட குழல்களாக அழகு செய்கின்றது. கருவறையிலிருந்து வெளி வரும் திருமுழுக்காட்டு நீர் வெளியேறும் பிரநாளம் எனப்படும் கோமுகியினை தன் தலையில் தாங்கிக் கொண்டு அமர்ந்துள்ளது. குபேரன் தன் சிவபக்தியால் வடதிசைக்கு அதிபதி ஆனவன். தனம், தான்யம், சந்தானம் உள்ளிட்ட எட்டு வித சக்தி பெற்ற திருமகள் தன் செல்வத்திற்குரிய சக்திகள் அனைத்தையும் சங்கநிதி பதுமநிதி என்ற இரு கணங்களிடம் ஒப்படைத்தாள். இவர்களை தன் கணக்கு பிள்ளைகளாக நியமித்துக் கொண்டார் குபேரன். குபேரனின் இருபுறமும் இவர்கள் அமர்ந்தனர். வலதுபுறத்தில் சங்கநிதியும், இடதுபுறம் பத்மநிதியும் இருப்பார்கள். சங்கநிதி கையில் சங்கு வைத்திருப்பான். இவன் தான் குபேரனிடம் செல்வம் பெற அனுமதி கொடுப்பவன். இவனது கை வர முத்திரை தாங்கி இருக்கும். மேற்சொன்ன இலக்கணப்படி இக்கணம் அமையாவிட்டாலும் சங்கநிதி போன்று உருவ அமைப்பிலும், கையில் சங்கு ஊதுவதாலும் இக்கணத்தை அவ்வாறும் கொள்ளலாம். |
653 | : | _ _ |a பூதகணம், கணம், சிவகணம், தஞ்சை பெருவுடையார் கோயில், பிரகதீஸ்வரர் கோயில், இராஜராஜீச்சுவரம், பெரிய கோயில் சிற்பங்கள், தக்ஷிணமேரு, முதலாம் இராஜராஜன், சோழர் கற்றளி, சோழர் கலைப்பாணி, சோழர் கலைக்கோயில்கள், சோழர் கட்டடக்கலை, இடைக்காலச் சோழர் கோயில், தஞ்சாவூர், சோழநாட்டு சிவத்தலங்கள், சோழர்கள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a தஞ்சை பெருவுடையார் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c தஞ்சாவூர் |d தஞ்சாவூர் |f தஞ்சாவூர் |
905 | : | _ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜன் |
914 | : | _ _ |a 10.7831901 |
915 | : | _ _ |a 79.13123578 |
995 | : | _ _ |a TVA_SCL_000378 |
barcode | : | TVA_SCL_000378 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |